கடனை கட்டச்சொல்லி வக்கீல் நோட்டீஸ்: நகை தொழிலாளி தற்கொலை

ஆவடி: கடனை திரும்ப கட்டச்சொல்லி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியதால் நகை தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார். ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல், சுப்பிரமணி நகர், 2வது தெருவை சேர்ந்தவர் பழனி (42). இவர் நகை செய்யும் தொழிலாளி. இவரின் மனைவி அன்னலட்சுமி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில், பழனி, தொழிலை அபிவிருத்தி செய்வதற்காக அதே பகுதியை சேர்ந்த ஒருவரிடம் வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து ரூ.2 லட்சம் பெற்றதாக தெரிகிறது. தொழிலில் பின்னடைவு ஏற்பட்டதால், அந்த பணத்தை  திரும்ப கொடுக்க முடியாமல் தவித்துள்ளார்.இதனிடையே கடன் பணத்தை தரும்படி பழனிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி  உள்ளனர். இதனால் பழனி அதிர்ச்சியடைந்தார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்த பழனி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருமுல்லைவாயல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பழனியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி இன்ஸ்பெக்டர் ஷாம் வின்சென்ட் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். …

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை