கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் மேலும் 30,941 பேர் பாதிப்பு, 36,275 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ், 350 பேர் உயிரிழப்பு

புதுடெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.38 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 3.27 கோடியை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 30,941 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,27,68,880 ஆக உயர்ந்தது.* புதிதாக 350 பேர் இறந்துள்ளனர்.* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,38,560 ஆக உயர்ந்தது.* தொற்றில் இருந்து ஒரே நாளில் 36,275 பேர் குணமடைந்துள்ளனர்.* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,19,59,680 ஆக உயர்ந்துள்ளது.* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,70,640 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.* குணமடைந்தோர் விகிதம் 97.53% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.34% ஆக குறைந்துள்ளது.* சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.13% ஆக குறைந்துள்ளது.* இந்தியாவில் இதுவரை 64,05,28,644 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது….

Related posts

மாதவிடாய் விடுப்பு வழங்க கர்நாடக அரசு திட்டம்!

மன்மத ராசா.. மன்மத ராசா.. கன்னி மனச கிள்ளாதே… பிரபல மேட்ரிமோனியல் மூலமாக 50 பெண்களை வீழ்த்திய மன்மதன்

நிலைக்குழு தேர்தலில் கவுன்சிலர்களை இழுக்க பாஜ ரூ.2 கோடி பேரம்