கடந்த மே மாதத்தில் இந்தியாவில் ரூ.2,89,230 கோடி மதிப்புள்ள பொருட்கள் ஏற்றுமதி: ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: கடந்த மே மாதத்தில் இந்தியாவில் ரூ.2,89,230 கோடி மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஏற்றுமதி மதிப்பான ரூ.3,10,250 கோடியை விட மே மாத ஏற்றுமதி 7.2 சதவீதம் குறைந்துள்ளது. எனினும் 2021 மே மாத ஏற்றுமதி மதிப்புடன் ஒப்பிட்டால் 2022 மே மாதத்தில் ஏற்றுமதி 15.46 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியாவின் இறக்குமதி மதிப்பு மே மாதத்தில் 56.14 சதவீதம் அதிகரித்து ரூ.4,70,184 கோடியாக உயர்ந்துவிட்டது. ஏற்றுமதி குறைந்து இறக்குமதி அதிகரிப்பால் இந்தியாவின் வெளிவர்த்தக பற்றாக்குறை ரூ.1,80,953 கோடியாக உயர்ந்துள்ளது. 2021 மே மாதம் ரூ.48,709 கோடியாக இருந்த வெளிவர்த்தக பற்றாக்குறை 2022 மே மாதம் ரூ.1,80,953 கோடியாக உயர்ந்துவிட்டது.இந்தியாவில் காய்கறிகள், பழங்கள், முந்திரி, தேயிலை, வாசனை பொருட்கள் ஆகியவற்றின் உற்பத்தி அதிகம் இருந்தாலும், உலக வேளாண் வர்த்தகத்தில் இந்தியாவின் பங்கு ஒரு சதவீத அளவிலேயே இருந்து வருகிறது. இந்தியாவின் ஏற்றுமதி ஜனவரி மாதத்தில் 25.28 சதவீதம் அதிகரித்து 34.5 பில்லியன் டாலராக உள்ளது. பொறியியல், பெட்ரோலியம், நகை ஆபரணம் உள்ளிட்ட துறைகளில் அதிக அளவில் ஏற்றுமதி மேற்கொள்ளப்பட்டுள்ளன. இறக்குமதி 23.54 சதவீதம் அதிகரித்து 51.93 பில்லியன் டாலராக உள்ளது. விளைவாக, ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு இடையிலான இடைவெளி அதிகரித்து வர்த்தகப் பற்றாக்குறை 17.42 பில்லியன் டாலராக உள்ளது….

Related posts

எத்தியோப்பியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.10 கோடி கொகைன் பறிமுதல்: சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்த பெண் விமான நிலையத்தில் கைது

டெல்லி உயர்நீதிமன்றத்தில் கருணை கொலைக்கு அனுமதி கோரிய மனு நிராகரிப்பு

நண்பர்களுக்கு ஆதாயம் தேடி தருவதுதான் மோடியின் முதன்மை கொள்கை: காங்கிரஸ் குற்றச்சாட்டு