கடந்த ஆட்சியில் நடந்த உண்மை சம்பவம் படமாகிறது

சென்னை: ‘மரப்பாச்சி’, ‘ஆண்கள் ஜாக்கிரதை’ ஆகிய படங்களை தயாரித்த ஜெம்ஸ் பிக்சர்ஸ், அடுத்து ஒரே நேரத்தில் ‘வந்தியத்தேவன் மீது பிசிஆர் வழக்கு’, ‘அக்னி பாதை’ ஆகிய படங்களை தயாரிக்கிறது. இதில் ‘வந்தியத்தேவன் மீது பிசிஆர் வழக்கு’ படத்தை ‘ஒரு நடிகையின் வாக்குமூலம்’ படத்தின் இயக்குனர் ராஜ்கிருஷ்ணா எழுதி இயக்குகிறார். மற்றொரு படமான ‘அக்னி பாதை’ படத்தை தயாரிப்பாளர் முருகானந்தம் கதை, வசனம் எழுதி இயக்கி ஹீரோவாக நடிக்கிறார். அருள் ஒளிப்பதிவு செய்ய, பாலகணேஷ் இசை அமைக்கிறார். ஆயர்பாடி கண்ணன் இணைந்து தயாரிக்கிறார். ‘வந்தியத்தேவன் மீது பிசிஆர் வழக்கு’ படம் குறித்து  இயக்குனர் ராஜ்கிருஷ்ணா கூறுகையில், ‘கடந்த அதிமுக ஆட்சியில் ஒரு கல்வியாளன், ஒரு அரசியல்வாதியால் பந்தாடப்பட்ட உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படத்தை உருவாக்குகிறோம்’ என்றார். …

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை