கடந்த அதிமுக ஆட்சியில் 2015ல் கட்டப்பட்டது அரசுப்பள்ளி மேற்கூரை விழுந்து 3 மாணவர்கள், ஆசிரியர் காயம்: தண்டராம்பட்டு அருகே பரபரப்பு

தண்டராம்பட்டு: திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த தரடாப்பட்டு ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 6 முதல் 10ம் வகுப்பு வரை 454 மாணவர்கள் படிக்கின்றனர். இங்குள்ள 2 அடுக்குமாடி கட்டிடம் கடந்த 2015ல் அதிமுக ஆட்சியின்போது ரூ.58 லட்சம் செலவில் கட்டப்பட்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று 6ம் வகுப்பு மாணவர்களுக்கு உடற்கல்வி ஆசிரியர் தினகரன் பாடம் நடத்தி கொண்டிருந்தார். அப்போது, வகுப்பறையின் மேற்கூரையில் இருந்த சிமென்ட் பூச்சுகள் திடீரென உதிர்ந்து விழுந்து 3 மாணவர்கள் மற்றும் ஆசிரியர் தினகரன் ஆகியோர் மீது விழுந்து படுகாயம் அடைந்தனர். அவர்களை மற்ற ஆசிரியர்கள் மீட்டு தண்டராம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில், ஒரு மாணவர் மேல்சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். …

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்