கடந்த அதிமுக ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து ஆய்வு: ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி டேவிதார் ஆய்வு

சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி டேவிதார் ஆய்வு செய்தார்.கடந்த அதிமுக ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சென்னை மாநகரம் முழுவதும் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டது. ஆனால் அமைக்கப்பட்ட சில மாதங்களிலேயே மழை பெய்து சென்னை முழுவதும் தண்ணீரில் மிதந்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து திமுக ஆட்சிக்கு வந்ததும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் என்னவெல்லாம் செய்யப்பட்டது, சரியான முறையில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டதா, ஏதேனும் முறைகேடு நடந்துள்ளதா என ஆய்வு செய்ய  ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி டேவிதார் தலைமையில்   ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டது. இதை தொடர்ந்து இந்த கமிஷன் பல இடங்களுக்கு சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: குளங்கள், நீர்நிலைகள், மழைநீர் வடிகால் மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் உள்ள இடங்களுக்கு சென்று ஆய்வு செய்து வருகிறோம். கடந்த வாரம் அம்பத்தூர் மண்டலத்தில் பூங்காங்கள், அத்திப்பட்டு, கே.கே.நகர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட 7 இடங்களுக்கு சென்று ஆய்வு நடத்தினோம். மேலும், இதுவரை பொதுமக்களிடமிருந்து 1000க்கும் மேற்பட்ட புகார்கள் தபால் வழியாகவும் நேரிலும் பெறப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் குடியிருப்பு இடங்களில் ஒன்றும் செய்யாமல் ஏற்கனவே இருந்த மழைநீர் வடிகாலை புதுப்பித்து விட்டனர்.இதனால்தான் குடியிருப்பு இடங்களில் மழைநீர் தேங்கியது, அதுமட்டுமல்லாமல் சாலைகளுக்கு மேல் பல இடங்களில் மழைநீர் வடிகால் அமைத்துள்ளனர். இவ்வளவு பணம் செலவழித்தும் சரியாக சீர் செய்யவில்லை, நீர்நிலைகளையும் சீரமைக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.இதற்கு முன்னர், மெட்ரோ வாட்டர் மற்றும் கார்ப்பரேஷனுடன் இணைந்து பணியாற்றிய  ஜிஐஎஸ் நிபுணர் தயானந்த் கிருஷ்ணன் கூறுகையில், ‘‘ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை  சாலைக்கு மேலேயும் கீழேயும் பார்க்க வேண்டும். பைபர் கேபிள்களுடன் மழைநீர் வடிகால் தனித்தனி இடத்தில் அமைக்கப்பட்டதா, மழைநீர் சரியான முறையில் செல்கிறதா, இது தவிர பல்வேறு நீர்நிலைகள் சீர் செய்யப்பட்டதா என பல இடங்களை ஆய்வு செய்ய வேண்டும்’’ என்றார். தற்போது, இந்த ஆய்வு முழு வீச்சில் நடந்து வருவதால் பல முறைகேடுகள் வெளியேவரும்  என தகவல் தெரிவித்துள்ளனர். இன்னும் மூன்று மாதங்களில் ஆய்வு முடிக்கப்பட்டு அறிக்கையாக அரசிடம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது….

Related posts

மெரினா கடற்கரை அழகுபடுத்தும் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு எத்தனை கடைகள்?.. மாநகராட்சி பதில் தர ஐகோர்ட் உத்தரவு

குடியிருப்பில் நள்ளிரவு தீவிபத்து உடல் கருகி 2 குழந்தைகள் பலி: ஆபத்தான நிலையில் பெற்றோருக்கு சிகிச்சை

சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அலுவலகம், ஏர் கார்கோவில் மது, சிகரெட், குட்கா உபயோகிக்க தடை: சுங்கத்துறை ஆணையர் எச்சரிக்கை