கடத்தலை தடுக்க கடலில் வனச்சரக அதிகாரிகள் ரோந்து

மண்டபம், ஆக.2: மண்டபம் பகுதியில் கடத்தலை தடுக்கும் விதமாக மண்டபம் முதல் வேதாளை வரை தென்கடலில் வனச்சரக அதிகாரிகள் கடலில் ரோந்து பணியில் நேற்று ஈடுபட்டனர். மண்டபம் ஒன்றியம் மண்டபம்,வேதாளை ஆகிய கடலோரப் பகுதியில் இருந்து அதிகமாக இலங்கைக்கு கடத்தல் பொருள் கடத்திச் செல்வதாக தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன.

அதன்பேரில் மண்டபம் வனச்சரக அதிகாரிகள் தென் கடலில் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மண்டபம் தெற்கு மீன்பிடி இறங்கும் தளம் பகுதி முதல் வேதாளை கடலோரப் பகுதிவரை நேற்று காலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கடல் பகுதியில் மீன்பிடித்து வந்த விசைப் படகுகள் மற்றும் நாட்டு படகுகளை சோதனையிட்டனர். படகில் தடை செய்யப்பட்ட கடல் அட்டை ஏதும் பிடித்து மீனவர்கள் வைத்துள்ளார்களா என்பது குறித்து சோதனை செய்தனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி