கஞ்சா வைத்திருந்த இருவர் மீது வழக்கு

 

உத்தமபாளையம், ஆக. 7: ராயப்பன்பட்டி அருகே அணைப்பட்டி – சுருளி அருவி சாலையில் கஞ்சா பொட்டலங்கள் விற்பனை நடப்பதாக உத்தமபாளையம் மதுவிலக்கு எஸ்.ஐ மலைச்சாமிக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, அவர் ரோந்து வந்தபோது, அணைப்பட்டி, சண்முகநாதன் கோயில் தெருவை சேர்ந்தவர் நேரு (59), என்பவரிடம், இருந்து 330 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவரை பிடித்து உத்தமபாளையம் மதுவிலக்கு காவல்நிலையம் கொண்டு வந்தனர். அதுபோல், கௌதம் என்பவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்