கஞ்சா விற்பனை செய்த 52 பேர் சிறையிலடைப்பு

ஆவடி: ஆவடி காவல் ஆணையத்திற்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்த 52 ேபரை போலீசார் சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 35 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தமிழகம் முழுவதும் கஞ்சா வேட்டை – 2.0 என்ற பெயரில் கடந்த மாதம் 28ம் தேதி கஞ்சாவிற்கு எதிராக மாநிலம் முழுவதும் சோதனை நடத்த காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திர பாபு உத்தரவிட்டார். அதன்பேரில். ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், ஆவடி காவல் ஆணையர் எல்லைக்குள் மார்ச் 28ம் தேதி முதல் கஞ்சாவுக்கு எதிரான போர் என்ற பெயரில் சிறப்பு கஞ்சா சோதனை நடத்துமாறு அனைத்து துணை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தினார்.இதுதொடர்பாக கஞ்சா கடத்தல்காரர்களை தடுக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு கஞ்சா விற்பனை செய்த 52 பேர் மீது 33 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கஞ்சா வியாபாரிகளிடம் இருந்து சுமார் 35 கிலோ, அவர்களுடைய சொத்துகள் மற்றும் 6 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட 52 குற்றவாளிகளும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். மேலும், தகவல்களை ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்குமாறு கமிஷனர் கேட்டுக்கொண்டார்….

Related posts

காதலுக்கு ஊழியர் மறுப்பு; கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு: சிறுவன், 3 பேர் கைது

இரட்டை கொலை வழக்கு : 3 பேருக்கு இரட்டை ஆயுள்

பள்ளியில் பிளஸ் 2 மாணவிக்கு தாலி கட்டிய சக மாணவன்: உடந்தையாக இருந்த 3 மாணவர்கள் சஸ்பெண்ட்