கஞ்சா சாக்லேட் விற்ற ஒடிசா வாலிபர் கைது

 

மதுக்கரை,செப்.29: கோவை ஈச்சனாரி எல் அன்ட் டி பைபாஸ் ரோடு சந்திப்பு பகுதியில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக மதுக்கரை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மதுக்கரை எஸ்.ஐ. செந்தில்குமார் தலைமையில் மாறுவேடத்தில் அங்கு சென்ற போலீசார் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது அங்குள்ள பேக்கரி பின்புறம் சந்தேகத்திடமாக நின்று கொண்டிருந்த நபரை அழைத்து சோதனை செய்த போது அவரிடம் கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட் இருந்தது தெரிய வந்தது.இதனைத்தொடர்ந்து அவனை காவல்நிலையதிற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ஒடிசா மாநிலம் பட்ராக் பகுதியை சேர்ந்த யுதிஸ்தார் என்பவரின் மகன் பிரசன்ன பிஸ்வால் என்பதும், இவர் மதுக்கரை குரும்பபாளையம் பகுதியில் தங்கி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டு வடமாநில தொழிலாளர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவனை கைது செய்த போலீஸார் அவனிடமிருந்த 1.250 கிலோ கஞ்சா மற்றும் 750 கிராம் கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்