கஞ்சா சாக்லேட் குற்றவாளிக்கு குண்டாஸ்

கோவை, செப்.27: கோவை மாவட்டம் கோவில்பாளையம் பகுதியில் கடந்த மாதம் 34 கிலோ கஞ்சா சாக்லேட்டை விற்பனைக்கு வைத்திருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கோபர்தான் சமல் என்பவர் மகன் சஞ்சயகுமார் சமல் (40) என்பவரை பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், பொது அமைதி மற்றும் பொது சுகாதார பராமரிப்பிற்கு பாதகமான செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக சஞ்சயகுமார் சமல் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் பரிந்துரை செய்தார்.

அதன்பேரில், கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். மேலும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தாலோ, பொது சுகாதார பராமரிப்பிற்கு பாதகமாக செயல்பட்டாலோ அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட போலீசார் எச்சரித்துள்ளனர். கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை 16 கஞ்சா வழக்கு குற்றவாளிகள் உட்பட 51 நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

திருச்சி மாவட்டத்திற்கு சட்டசபையில் அறிவிக்கப்பட்ட மருத்துவக்கல்லூரி அரங்கம் மட்டுமே தரம் குறைவு

குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்

திருவெறும்பூர் அருகே தனியார் கம்பெனியில் இரும்பு திருடியவர் கைது