கஞ்சா, குட்கா புழக்கத்தில் விடுபவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்பி வீ.வருண்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: திருவள்ளூர் மாவட்டத்தில் இளம் தலைமுறையினரை போதைக்கு அடிமையாகி அவர்களது வாழ்க்கையை சீரழித்து வரும் கஞ்சா, குட்கா மற்றும் லாட்டரி புழக்கத்தை வேரோடு ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் எவ்வித தயக்கமும், அச்சமும் இல்லாமல் காவல் துறையை அணுகி அது பற்றிய தகவல்களை தெரிவிக்கும் வண்ணம் மாவட்ட எஸ்பி யால் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட 6379 904848 என்ற பிரத்யோக தொலைபேசி எண்ணில்  தகவல் தெரிவிக்கலாம்.மாவட்டத்தில் தொடர்ந்து கஞ்சா, குட்கா விற்கும் செயல்களில் ஈடுபடும் நபர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க ஆவன செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் கஞ்சா, குட்கா மற்றும் லாட்டரி புழக்கத்தை அறவே ஒழிக்க முழுவீச்சில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் தங்கள் பகுதியில் எவரேனும் மேற்படி சமூக விரோத செயல்களில் ஈடுபடுவது பற்றி தெரிந்தால் மாவட்ட போலீஸ் எஸ்பி யின் பிரத்யோக எண் 6379904848 என்ற தொலைபேசி எண்ணில் வாட்ஸ் ஆப் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட எஸ்பி வீ.வருண்குமார் தெரிவித்துள்ளார்….

Related posts

ஆயிரமாண்டு மடமைகளைக் களையெடுத்த அறிவியக்கம் திமுக : முதல்வர் மு.க.ஸ்டாலின்

மிலாடி நபியை முன்னிட்டு சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயங்கும்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்