கஞ்சாவுடன் 2 பேர் கைது வட மாநில தொழிலாளர்கள் அறையில் போலீஸ் சோதனை வங்கி கணக்குகளும் ஆய்வு

நாகர்கோவில், ஆக. 6: குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் திருட்டு மது, புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில், மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாரும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன் தினம் கன்னியாகுமரி விவேகானந்தபுரம் பகுதியில் நேற்று ரோந்து பணியில் இருந்த போது வட மாநிலத்தை சேர்ந்த இரு வாலிபர்களை சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். அப்போது அவர்களிடம் 50 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் மேங்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்த சிப்சங்கர் மண்டல் (42), மேற்கு வங்காளம் அசிம்நகரை சேர்ந்த முகைதீன்(40) என்பது தெரிய வந்தது. இவர்கள் இங்கு கூலி வேலை செய்து வருகிறார்கள். சமீபத்தில் ஊருக்கு சென்ற இவர்கள், அங்கிருந்து கஞ்சா பொட்டலங்களை கொண்டு வந்தது தெரிய வந்தது. இவர்களை கைது செய்த போலீசார், கன்னியாகுமரி அருகே இவர்கள் தங்கி இருந்த அறையிலும் சோதனை நடத்தினர். வேறு எங்கும் கஞ்சா பதுக்கி வைத்து உள்ளார்களா? என்ற கோணத்தில் சோதனை நடந்தது. இவர்களின் வங்கி கணக்குகளும் ஆய்வு செய்யப்பட்டன. ஆனால் பெரிய அளவில் பணம் இல்லை. இவர்கள் ஊரில் இருந்து சொந்த உபயோகத்துக்கு கஞ்சா கொண்டு வந்தது தெரிய வந்தது. கைதான இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

Related posts

அருமனை அருகே சோகம்; நண்பன் தூக்கிட்டு தற்கொலை அதிர்ச்சியில் தொழிலாளி சாவு

சதுர்த்தி விழா இன்று கொண்டாட்டம் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்க தொடங்கினர்: 13ம் தேதி முதல் நீர் நிலைகளில் கரைப்பு

விஜய் வசந்த் எம்.பி. விநாயகர் சதுர்த்தி வாழ்த்து