கச்சமங்கலம் அருகே புதியதாக போடப்பட்ட தார் சாலையால் வாகன ஓட்டிகள் அவதி-நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

திருக்காட்டுப்பள்ளி : திருக்காட்டுப்பள்ளி-கல்லணை சாலையில் கூனாங்கரை பஸ் நிறுத்தம் அருகே புதியதாக போடப்பட்டு வரும் சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் தடுமாறி விழுந்து காயமடைந்தனர்.கல்லணையிலிருந்து திருக்காட்டுப்பள்ளிக்கு பாதிரகுடி, செய்யாமங்கலம் அகரப்பேட்டை, நேமம் வழியாக வரும் சாலையை சீர்அமைக்கும் பணி நடந்து வருகிறது. நேற்று முன்தினம் சாலையின் பாதியளவில் சுமார் அரையடிக்கு உயர்த்தி சாலை அமைக்கும் பணி நடந்துள்ளது. இதனால் ஒரு பாதி சாலை உயரமாகவும், மறு பாதி சாலை பள்ளமாகவும் உள்ளது. சாலை பணியில் ஈடுபட்ட பணியாளர்கள் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அறிந்து கொள்ளும் வகையில் தடுப்புகளோ, எச்சரிக்கை கொடியோ வைக்காமல் அப்படியே போட்டு விட்டு சென்றனர். அப்பகுதியில் தெரு விளக்குகள் இல்லை. எதிரில் வரும் வாகனத்திற்கு வழிவிட பைக்கில் வந்தவர்கள் சாலையில் மறுபுறம் செல்ல அடுத்தடுத்து வந்த நான்கு பேர் முற்பட்டபோது பைக்கிலிருந்து தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தனர். இது குறித்து தகவல் கிடைத்து தோகூர் காவல் நிலைய சப்இன்ஸ்பெக்டர் அய்யாப்பிள்ளை அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வரும் வாகனங்களை எச்சரித்து அனுப்பினார். சாலை பணியாளர்கள் உரிய எச்சரிக்கை கொடி வைத்திருந்தால் விபத்துகளை தவிர்த்திருக்காலாம்….

Related posts

பள்ளி நேரத்திற்கு ஏற்ப பேருந்து நேரம் மாற்றம்; திருப்போரூர் எம்எல்ஏவுக்கு மாணவர்கள் நன்றி

பூந்தமல்லி நகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம்; பெட்ரோல் பங்க்கில் 2 ஆயிரம் லிட்டர் மெத்தனாலை பதுக்கி வைத்த மாதேஷ்: போலீஸ் விசாரணையில் அம்பலம்: பங்க்கிற்கு சீல் வைப்பு