கச்சத்தீவை மீட்டெடுப்பதே தமிழ்நாடு அரசின் முதன்மையான குறிக்கோள்: மீன்வளத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்..!

சென்னை: கச்சத்தீவை மீட்டெடுப்பதே தமிழ்நாடு அரசின் முதன்மையான குறிக்கோளாக உள்ளது என மீன்வளத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட மீன்வளத்துறை கொள்கை விளக்க குறிப்பை தாக்கல் செய்தது. இதில் பாரம்பரிய கடற்பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்கும் போது இலங்கையால் கைது செய்யப்படுகின்றனர். இலங்கை அரசு கைது செய்வது நீண்டகாலகாம நிலையில் அடைப்பதால் மீனவர்கள் மத்தியில் கவலை நிலவுகிறது. மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். கச்சத்தீவை மீட்பது தான், மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக இருக்கும். இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை மீட்டெடுப்பதே அரசின் குறிக்கோள். கச்சத்தீவை மீட்டெடுப்பதன் மூலமே பாரம்பரிய கடற்பரப்பில் மீன் பிடிக்கும் உரிமையை மீட்டெடுக்க முடியும். கடந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கை அரசால் பிடிக்கப்பட்ட 88 படகுகள் மற்றும் 23 மீனவர்களை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. …

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்