கங்கையில் சடலங்கள் மிதந்த விவகாரம் உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு

புதுடெல்லி: உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் கங்கை நதியில் சடலங்கள் மிதந்த விவகாரம் தொடர்பான மனுக்களை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பிரதீப் குமார் யாதவ் மற்றும் விஷால் ஆகியோர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்கள் கங்கை நதியில் வீசப்படுகிறது. இதனால் கிராமங்களிலும் கொரோனா பரவல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டும் இல்லாமல் மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சினையாகவும் இது தற்போதுமாறிவிட்டது. இவை அனைத்திற்கும் காரணம் அரசு அதிகாரிகள் தங்களது கடமைகளை சரிவர செய்யாதது தான். அதனால் துறை சார்ந்த அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று ஆற்றில் அடித்து வரும் உடல்கள் அனைத்தையும் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தி மரணத்திற்கான காரணத்தை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்’’ என குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கானது உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ‘மனுக்களை விசாரிப்பதற்கான எந்த முகாந்திரம் இல்லை’ எனக்கூறி அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்….

Related posts

தேர்வில் முறைகேடு குற்றச்சாட்டுக்கு மத்தியில் நீட் கவுன்சலிங் திடீர் ஒத்திவைப்பு: ஜூலை இறுதியில் நடக்க வாய்ப்புள்ளதாக தகவல்

நாடாளுமன்றம் 22ம் தேதி கூடுகிறது ஜூலை 23ல் ஒன்றிய பட்ஜெட்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்

மார்க்சிஸ்ட் கட்சியின் வீழ்ச்சி கவலை தருகிறது: மத்தியக்குழு பரபரப்பு அறிக்கை