ஓவேலி வனப்பகுதியில் சுற்றித்திரியும் உயிர்கொல்லி யானைகளை பிடிக்க கால்நடைத்துறையினர் முகாம்

கூடலூர்:  நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட ஆரூற்று பாறை மற்றும் பாரம் பகுதிகளில் கடந்த 26, 27 தேதிகளில் டீக்கடைக்காரர் மற்றும் ஒரு பெண் உள்ளிட்ட இருவர் காட்டுயானைகளிடம் சிக்கி உயிரிழந்தனர்.பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினரின் கோரிக்கையை ஏற்று அப்பகுதியில் வனத்துறையினர் கும்கி யானைகள் மற்றும் ட்ரோன் கேமரா மூலம் குறிப்பிட்ட யானைகளின் நடமாட்டத்தை நான்காவது நாளாக  கண்கானித்து வருகின்றனர். இதில் ஆரூற்று பாறை பகுதியில் டீக்கடைக்காரரான ஆனந்த் என்பவரை கொன்ற காட்டு யானை கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிகளுக்குள் வருவதாலும் கடந்த சில வருடங்களில் பல மனித உயிர்களை பலிவாங்கியுள்ளதாலும் இந்த யானையை மயக்க ஊசி போட்டு பிடித்து வேறு பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  இதன் தொடர்ச்சியாக நேற்று யானைகளை கண்கானிக்கும்  வனத்துறையினருடன் முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் யானை நடமாட்டம் உள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.ஹெல்லன் செட், பெரியர் நகர்,காப்பி ராட்டை, மூலக்காடு, கிளன்வன்ஸ், வாளகத்தை உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தனர்.இது குறித்து வனத்துறை தரப்பில் கூறுகையில், யானையை பிடிக்க மயக்க ஊசி போடும் நேரத்தில் யானையின் உயிருக்கு ஆபத்து ஏற்படாதவாறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். யானையை கும்கி யானைகள் நெருங்கி இழுத்து வருவதற்கான பகுதியாகவும்,அதனை லாரியில் ஏற்றுவதற்கு வசதியான இடமாக இருக்க வேண்டும். இதுபோன்ற பாதுகாப்பு அம்சங்கள் உள்ள பகுதிக்கு யானையினை இடம் பெயரச்செய்து அதன் பின்னரே அதற்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.தேவைக்கேற்ப கூடுதல் கும்கிகள் வரவழைக்கப்படும். மேலும் மனித உயிர்கள் பலியாவதை  தடுக்க  தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள்  இரவு நேரங்களில் தேவையின்றி நடமாடக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.தற்போது ஐம்பதுக்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள்,வனப்பணியாளர்கள் இப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில்,நெலாக்கோட்டை ரேஞ்சர் கணேஷ் தலைமையில் கூடுதல் குழுவினரும் இதில் இணைந்துள்ளனர்.அத்துடன் லாஸ்டன் நெ 4 பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சங்கர் மற்றும் கிருஷ்ணா யானைகள் இரண்டும் நேற்று மாலை ஆனந்த் என்ற டீக்கடைகாரரை கொன்ற காட்டுயானை நடமாடும் கிளன்வன்ஸ் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டன….

Related posts

மின்னஞ்சல் மூலம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடி குண்டு மிரட்டல்: மிரட்டல் விடுத்த நபர் குறித்து கோட்டூர்புரம் போலீசார் விசாரணை

நீட் எனும் சமூக அநீதிக்கு எதிராக திமுகவின் போரில் இன்று ஒலிக்கும் முழக்கங்கள் நாளைய வெற்றிக்கான அறிவிப்புகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு

அமாவாசை, வார இறுதியையொட்டி சிறப்புப் பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துத்துறை தகவல்