ஓவரூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்

 

முத்துப்பேட்டை, ஜூலை 6: முத்துப்பேட்டை அடுத்த ஓவரூர் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சென்னை ஆர்.ஜிஏ மூலம் உதவி மற்றும் பங்களிப்பு திட்டத்தில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று பள்ளி தலைமையாசிரியர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.

பெற்றோர் ஆசிரியர் தலைவர் பவுன்தாஸ், கிராம கமிட்டி தலைவர் பட்டாணி, ஊராட்சி மன்ற உறுப்பினர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாதவன், சூரியகலா ஆகியோர் மாணவர்களுக்கு புத்தகப்பை, தண்ணீர் குடுவை, குறிப்பேடுகள், எழுதுபொருள்கள், குளிர்பானம் மற்றும் பிஸ்கட்டுகள் உட்பட கல்வி உபகரணங்கள் வழங்கினர். இதில் பள்ளி மேலாண்மை குழுத்தலைவி சுகாசினி, துணைத்தலைவி சத்யா மற்றும் உறுப்பினர்கள் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், கிராம கமிட்டியினர் பெற்றோர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியை கமலா நன்றி கூறினார்.

Related posts

பொன்னேரிக்கரை அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி: கலெக்டர் தொடங்கி வைத்தார்

குடிநீர் பிரச்னை தொடர்பாக அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைத்து ஒருமையில் பேசிய தாசில்தாரை முற்றுகையிட்ட பொதுமக்கள்: திருக்கழுக்குன்றம் அருகே பரபரப்பு

நான் முதல்வன் திட்டத்தின் மூலம் உயர்வுக்கு படிப்பு பயிற்சி பட்டறை; செங்கை கலெக்டர் தொடங்கி வைத்தார்