ஓரின சேர்க்கை காட்சி இருப்பதால் அனிமேஷன் படத்துக்கு தடை

துபாய்: ஓரின சேர்க்கை காட்சிகள் இடம்பெற்றுள்ள அனிமேஷன் திரைப்படமான ‘லைட் இயர்’ என்ற திரைப்படத்தை துபாயில் திரையிட தடை விதிப்பதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிவித்துள்ளது.பிரபல வால்ட் டிஸ்னி – பிக்சரின் அனிமேஷன் திரைப்படமான ‘லைட் இயர்’ என்ற திரைப்படத்தில் ஓரினச் சேர்க்கையாளர்களுடன் தொடர்புடைய கதாபாத்திரங்கள் இருப்பதால், அந்தப் படத்தை திரையரங்குகளில் திரையிட ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தடை விதித்துள்ளது. இதுகுறித்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் இளைஞர் மற்றும் கலாச்சார துறை அமைச்சகத்தின் ஊடக ஒழுங்குமுறை அலுவலகத்தின் நிர்வாக இயக்குனர் ரஷித் கல்பான் அல் நுஐமி வெளியிட்ட அறிவிப்பில், ‘நாட்டின் ஊடக விதிகளை மீறியுள்ளதால் ‘லைட் இயர்’ திரைப்படத்தை ஐக்கிய அரபு எமிரேட்சில் திரையிடும் உரிமம் வழங்கப்படாது. அந்தப் படத்தில் காட்டப்படும் பல காட்சிகளில் ஓரினச்சேர்க்கை கதாபாத்திரங்கள் இடம்பெற்றுள்ளன. அதனால் இந்தத் திரைப்படத்தை திரையிட தடை விதிக்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது….

Related posts

ஆட்சி அமைக்கப் போவது யார்? இங்கிலாந்தில் இன்று பொதுத்தேர்தல்: சுனக் – ஸ்டார்மர் இடையே கடும் போட்டி

டிரம்புடன் நடந்த நேரடி விவாதத்தில் தூங்கி விட்டேன்: ஜோ பைடன் ஒப்புதல்

ஜோ பைடனுக்கு மூளை பாதிப்பு நோய் உள்ளதாக தகவல்? அதிபர் தேர்தலில் பைடனுக்கு பதிலாக கமலா ஹாரிசை நிறுத்துங்கள்: அமெ. மூத்த ஊடகவியலாளர் வலியுறுத்தல்