ஓரினச் சேர்க்கையாளர்கள் விவகாரம் பாஜ எம்எல்ஏவுக்கு நடிகை ‘டோஸ்’

மும்பை: மகாராஷ்டிரா பாஜ எம்எல்ஏ சுதிர் முங்கந்திவார், அந்த மாநில சட்டப்பேரவையில் மகாராஷ்டிரா பொது பல்கலைக்கழக சட்டம் – 2016 (3வது திருத்தம்) மசோதா குறித்து பேசினார். அப்போது, ‘பல்கலைக்கழக வாரிய உறுப்பினர்கள் பதவியில் ஓரினச் சேர்க்கையாளர்கள், லெஸ்பியன்கள், திருநங்கைகள் (எல்ஜிபிடி) போன்றோரை சேர்க்கப் போகிறீர்களா? சமூகத்தில் அவர்களுக்கு சம வாய்ப்பை எப்படி அளிக்க முடியும்? எல்ஜிபிடியினரின் பாலியல் உறவுகள் குறித்து யாரும் இன்னும் வரையறுக்கவில்லை. ஒரு நபர் ஒரு விலங்குடன் பாலியல் உறவு வைத்திருந்தால், அந்த விலங்கு தன்னுடன் அவர் பாலியல் உறவு வைத்திருந்தார் என்று சான்றளிக்குமா? அவையில் என்ன நடக்கிறது என்பது புரியவில்லை. இதுகுறித்து, கூட்டு சட்டமன்ற மருத்துவக்குழு அமைத்து ஆலோசிக்க வேண்டும்’ என்றுதெரிவித்தார். பாஜ எம்எல்ஏ சுதிர் முங்கந்திவாரின் கருத்துக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், பாலிவுட் நடிகை சோனம் கபூரும் தனது பங்கிற்கு கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘அறியாமை, படிப்பறிவு இல்லாதவர், புண்படுத்தும் வகையில் கருத்து கூறியுள்ளார்’ என்று ‘ேடாஸ்’ விட்டுள்ளார். அவரது கருத்து பாலிவுட்டில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது….

Related posts

கண்ணாடி தொழிற்சாலையில் கம்ப்ரஷர் வெடித்து 6 தொழிலாளர்கள் பலி

ஆந்திராவில் ரசாயன தொழிசாலையில் தீ விபத்து

ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் பயணியிடம் இருந்து ரூ.67.11 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் பறிமுதல்