ஓராண்டுக்குப் பிறகு காவிரி ஆணையம் நாளை கூடுகிறது

புதுடெல்லி: தமிழகம் உட்பட நான்கு மாநில நீர் பங்கீடு பிரச்னையை தீர்க்கும் விதமாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உருவாக்கப்பட்டது. இதன் அடிப்படையில், இந்த ஆணையத்தின் கூட்டம் நான்கு மாநில உறுப்பினர்களுடன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடைசியாக கடந்தாண்டு ஆணையத்தின் 10வது கூட்டம் நடந்தது. பின்னர், கொரோனா 2வது அலை காரணமாக மீண்டும் நடத்தப்படவில்லை. இந்நிலையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 13வது கூட்டம், ஒன்றிய நீர்வள ஆணையத்தின் தலைவரும், காவிரி ஆணையத்தின் இடைக்கால தலைவருமான எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நாளை நடைபெற உள்ளது. இதில், ஒன்றிய ஜல் சக்திதுறை செயலாளர் மற்றும் 4 மாநில உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர். மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் செயல் திட்ட அறிக்கையை ரத்து செய்யும்படி ஒன்றிய நீர்வளத்துறைக்கு உத்தரவிடும்படி உச்ச நீதிமன்றத்தில் தமிழக நேற்று முன்தினம் வழக்கு தொடர்ந்தது. இந்த நிலையில், காவிரி ஆணையத்தின் கூட்டம் நடப்பதால், இதில் காரசார வாதங்கள் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது….

Related posts

டெல்லியில் அக்.5 வரை 163 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று அம்மாநில அரசு அறிவிப்பு

வாதங்கள் நிறைவடைந்த ஒரு வழக்கில் புதிய சாட்சியங்களை விசாரிக்க சட்டத்தில் இடமில்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

திருப்பதியில் லட்டு கலப்பட விவகாரம்; திண்டுக்கல் ஏஆர் டெய்ரி உரிமையாளர் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல்