ஓய்வூதியத்திலிருந்து ₹30 ஆயிரம் நிவாரணம்

சேலம், ஆக.6: சேலம் மாவட்ட பொதுமக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், கலெக்டர் பிருந்தாதேவி கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இதனிடையே, சேலம் உடையாப்பட்டி கோம்பைக்காடு பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டான ரத்தினம் (72), கலைஞர் வேடமிட்டு வந்து மனு ஒன்றை அளித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு தரப்பினரும் அவர்களுக்கு நிவாரண உதவி செய்து வருகின்றனர். இதில் நானும் பங்கேற்க விரும்புகிறேன். எனக்கு ஓய்வூதியமாக மாதம் ₹20 ஆயிரம் கிடைக்கிறது. இதில், எனது செலவுக்கு போக, ₹10 ஆயிரத்தை வரும் செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய 3 மாதங்களுக்கு பிடித்தம் செய்து, அதனை நிவாரண நிதிக்கு கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி மனு கொடுக்க வந்தேன்,’’ என்றார்.

Related posts

திருவெறும்பூர் அருகே மஞ்சள் காமாலைக்கு பச்சிளம் குழந்தை பலி

லால்குடி அருகே சங்கிலி கருப்பு கோயிலில் கொள்ளை முயற்சி

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 468 மனுக்கள் பெறப்பட்டது