ஓய்வு பெறும் நாளில் மதுரை மாநகராட்சிக்கு கழிவுநீர் வாகனம் பரிசு: டிரைவரின் செயலுக்கு பாராட்டு

 

மதுரை, ஜூலை 2: மதுரை, அண்ணாநகரை சேர்ந்தவர் மனோகரன். இவர் மதுரை மாநகராட்சியில் கடந்த 1992ல் டிரைவராக பணியில் சேர்ந்தார். சுமார் 32 ஆண்டுகள் பணியாற்றிய மனோகரன், கடந்த ஜூன் 30ல் ஓய்வு பெற்றார். இவர் மாநகராட்சியில் துணை கமிஷனரில் துவங்கி, உதவி கமிஷனர்களுக்கு டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். சம்பந்தப்பட்ட உதவி கமிஷனர்கள் மக்கள் பிரச்னையை சந்திக்கச் செல்வது வழக்கம். அப்போது அவர்களுக்கு கார் ஓட்டிச்சென்ற மனோகரன், பாதாளசாக்கடை மேன்கோல் வழியாக சாக்கடை வெளியேறி சாலை மற்றும் தெருக்களில் ஆறாக ஓடும் காட்சியை பார்த்திருக்கிறார்.

இதையடுத்து ஓய்வு பெறும் நாளில் கழிவுநீர் உறிஞ்சு வாகனம் ஒன்றை மாநகராட்சிக்கு நன்றிக்கடனாக செலுத்த வேண்டும் என மனதிற்குள் தீர்மானித்திருந்தார்.இதையடுத்து அவர் ஓய்வு பெற்ற நாளில் ரூ.2 லட்சம் செலவில் கழிவுநீர் உறிஞ்சு வாகனம் ஒன்றை மாநகராட்சிக்கு பரிசாக அளித்தார். நிகழ்ச்சியின்போது மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் தினேஷ்குமார் ஆகியோரிடம், வாகனத்திற்கான ஆர்சி புத்தகம், சாவியை மனோகரன் ஒப்படைத்தார். இதற்கு அலுவலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Related posts

தந்தை பெரியார் மணியம்மை கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வழிகாட்டு பயிற்சி

புகையிலை விற்றவர் கைது

சமயபுரம் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததால் 3 நாளாக மின்விநியோகம் நிறுத்தம்