ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க பேரவை கூட்டம்

 

விருதுநகர், ஜூலை 24: அரசு ஊழியர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என மாவட்ட பேரவை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. விருதுநகர் அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் உலகநாதன் தலைமையில் மாவட்ட பேரவை கூட்டம் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் எட்டியப்பன் சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில், ஓய்வு பெற்ற 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 10 சதம், 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 20 சதம், 85 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 30 சதம் என 100 வயது வரை கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஏராளமான ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் பங்கேற்றனர்.

Related posts

அருமனை அருகே சோகம்; நண்பன் தூக்கிட்டு தற்கொலை அதிர்ச்சியில் தொழிலாளி சாவு

சதுர்த்தி விழா இன்று கொண்டாட்டம் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்க தொடங்கினர்: 13ம் தேதி முதல் நீர் நிலைகளில் கரைப்பு

விஜய் வசந்த் எம்.பி. விநாயகர் சதுர்த்தி வாழ்த்து