ஓட்டேரியில் மீன்பாடி ஓட்டுனருக்கு சரமாரி கத்தி குத்து: நள்ளிரவில் காவல் நிலையத்தில் கத்தியுடன் வாலிபர் சரண்

சென்னை: ஓட்டேரியில் மீன்பாடி ஓட்டுனருக்கு சரமாரி கத்தியால் குத்திவிட்டு நள்ளிரவில் காவல் நிலையத்தில் கத்தியுடன் வாலிபர் நுழைந்து சரண்டரான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை ஓட்டேரி பிரிஷ்லி நகர் 2வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் முத்து(60), இவர் அதே பகுதியில் மீன்பாடி வண்டி ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் இரவு தனது மீன்பாடி வண்டியில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த 4 நபர்கள் முத்துவை எழுப்பி கஞ்சா உள்ளதா என கேட்டுள்ளனர். அதற்கு முத்து என்னிடம் கஞ்சா இல்லை எனக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த நபர்கள் தாங்கள் வைத்திருந்த கக்தியை எடுத்து முத்துவின் தலை, காது, நெற்றி உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டினர். அப்போது முத்துவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வரவே இளைஞர்கள் தப்பி ஓடி விட்டனர். முத்துவை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் வசந்தகுமார்(22) என்ற இளைஞர் கையில் கத்தியுடன் அருகில் இருந்த தலைமைச் செயலக காவலர் குடியிருப்பு காவல் நிலையத்திற்கு உள்ளே சென்று நாங்கள் ஒருவரை வெட்டி விட்டோம் என கூறியுள்ளார். இதனையடுத்து போலீசார் அவரிடம் இருந்த கத்தியை பறிமுதல் செய்து விசாரணை செய்து சம்பந்தப்பட்ட இடம் ஓட்டேரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதி என்பதால் அவனை ஓட்டேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஓட்டேரி இன்ஸ்பெக்டர் ஜானி செல்லப்பா வழக்கு பதிவு செய்து வசந்தகுமாரிடம் நடத்திய விசாரணையில் அவர் கொடுத்த தகவலின்பேரில் சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற நபர்களான ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன்(22), மோகன் பாபு(19), எலி (எ) செல்வராஜ்(22) ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த ஓட்டேரி போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது….

Related posts

சொகுசு கார் மோசடி: தவெக நிர்வாகி கைது

உரிய ஆவணம் இல்லாத பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 3 பேர் கைது

காரைக்குடியில் பிரபல ரவுடி சுரேஷ் கைது