ஓட்டல்களில் இன்று முதல் பார்சலுக்கு மட்டும் அனுமதி

சென்னை: ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்படுத்தப்படுவதால் ஓட்டல்களில் வாடிக்கையாளர்கள் உட்கார்ந்து சாப்பிடுவதற்கு அனுமதி இல்லை, பார்சல்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஓட்டல் உரிமையாளர்கள் கூறுகையில்: தமிழகத்தில் நேற்று முழு ஊரடங்கு காரணமாக 20 சதவீத ஓட்டல்களே திறக்கப்பட்டன. அனைத்து கடைகளும், வணிக நிறுவனங்களும் மூடி இருப்பதால் பலர் ஓட்டல்களை திறக்கவில்லை. காலை 6 மணியில் இருந்து 10 மணி வரையிலும், பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 9 மணி வரையிலும் பார்சல்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதால் ஓட்டல்கள் கடுமையான இழப்பை சந்தித்துள்ளது.மேலும் மாநிலம் முழுவதும் 1 லட்சம் ஓட்டல்கள் செயல்படுகின்றன. இதனை நம்பி 40 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். இன்று முதல் பார்சல்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும் என்று தெரிவித்து இருப்பதால் 90 சதவீத தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குறைந்த தொழிலாளர்களை வைத்து பார்சல்களை மட்டும் வழங்குவதால் லாபத்தில் ஓட்டலை நடத்த முடியாது. பார்சல்கள் மூலம் உணவுப் பொருட்களை வழங்குவதால் பல கைகள் மாறி வாடிக்கையாளர்களிடம் உணவு போய் சேரும் போது கொரோனா பரவும் ஆபத்தும் இருக்கிறது.அம்மா உணவகங்களில் சாப்பிடுவதற்கு அனுமதி அளித்திருப்பது போல ஓட்டல்களில் சமூக இடைவெளியை கடைபிடித்து சாப்பிடுவதற்கு அனுமதி வழங்க வேண்டும். கொரோனா ஊரடங்கால் ஓட்டல்களில் ஏற்கனவே கடும் பாதிப்பை சந்தித்துள்ள நிலையில் அதிலிருந்து பலர் இன்னும் மீளாமலேயே உள்ளனர். இது போன்ற சூழலில் பார்சல்கள் மட்டுமே வழங்கி ஓட்டல்களை நிச்சயமாக நடத்த முடியாது. இவ்வாறு கூறினார்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை