ஓட்டலில் சாப்பிட வந்த போது பெண் எஸ்.ஐ.,யிடம் கிண்டல் 3 போதை வாலிபர்கள் கைது: போலீஸ் என்ற பிறகும் அத்துமீறியதாக புகார்

சென்னை:சென்னை மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கவுசல்யா.  இவர், நேற்று முன்தினம் இரவு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றும் தோழியை பார்க்க சாதாரண உடையில் சென்றதாக கூறப்படுகிறது. பிறகு தோழியுடன் நுங்கம்பாக்கம் காவல் நிலையம் அருகே உள்ள ஓட்டல் ஒன்றில் இரவு உணவு சாப்பிட்டனர். அப்போது அதே ஓட்டலில் போதையில் இருந்த 3 வாலிபர்கள், கவுசல்யாவை பார்த்து கிண்டல் செய்து தகாத முறையில் சைகை காட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கவுசல்யா, நான் உதவி ஆய்வாளர் என்று கூறி அவர்களை எச்சரித்துள்ளார். ஆனால் 3 போதை வாலிபர்களும், யாராக இருந்தாலும் பரவாயில்லை என்று கூறி தொடர்ந்து கவுசல்யாவை பார்த்து ஆபாசமாக பேசி வந்துள்ளனர்.இதையடுத்து உதவி ஆய்வாளர் கவுசல்யா சம்பவம் குறித்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி விரைந்து வந்த போலீசார், போதையில் பெண் உதவி ஆய்வாளரிடம் தகராறு செய்து ஆபாச சைகை செய்த 3 போதை வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் தேனாம்பேட்டையை சேர்ந்த செல்வகுமார் (26), நரேஷ் (32), விக்னேஷ் (28) என தெரியவந்தது. இவர்கள் மது போதையில் பெண் உதவி ஆய்வாளர் என்றும் பாராமல் ஆபாசமாக பேசி அவரிடம் தகாத முறையில் நடந்தது விசாரணையில் தெரியவந்தது.அதைதொடர்ந்து 3 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் நுங்கம்பாக்கம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது….

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு