ஓசூரில் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணைந்தனர்

 

ஓசூர், டிச.12: ஓசூரில் உள்ள மேற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சம்சுதீன் தலைமையில், சுமார் 150க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர், மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ முன்னிலையில் இணைந்தனர். அவர்களுக்கு திமுக துண்டுகள் அணிவித்து பிரகாஷ் எம்எல்ஏ வரவேற்றார்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட துணை செயலாளர்கள் முருகன், சின்னசாமி, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ஜெயராமன், ஒன்றிய செயலாளர்கள் ரகுநாத், கருணாகரன், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் ஷேக்ரஷீத், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் நரசிம்மன், வேப்பனப்பள்ளி ஒன்றிய குழு தலைவர் மாதேஸ்வரன், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் சம்சுதீன், வேப்பனப்பள்ளி கிழக்கு ஒன்றிய துணை அமைப்பாளர் அஸ்லாம், திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

 

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்