ஓசூரில் தங்கும் விடுதியில் திடீர் தீ

 

ஓசூர், ஏப்.29: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பழைய பெங்களூரு பைபாஸ் சாலையில் தனியார் தங்கும் விடுதி இயங்கி வருகிறது. இங்கு 100க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. இந்நிலையில், நேற்று அதிகாலை 4.50 மணியளவில் திடீரென வரவேற்பறையில் மின்கசிவு ஏற்பட்டு, தீப்பிடித்து எரிய தொடங்கியது. அதனைக்கண்டு அங்கிருந்த பணியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே, சுதாரித்துக் கொண்டு அறையில் தங்கியிருந்தவர்களை வெளியேற்றினர். இதுகுறித்து சிப்காட் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்து கட்டுப்படுத்தினர். இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் ஆபத்து ஏற்படவில்லை. இதுதொடர்பாக ஓசூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை