ஓசூரில் குட்கா விற்பனை செய்த 10 கடைகளுக்கு சீல்

 

ஓசூர், ஜூன் 3: ஓசூர் பகுதியில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா மற்றும் குட்கா பொருட்களை விற்பனை செய்த 10 கடைகளுக்கு, கடந்த 2 நாட்களில் சீல் வைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி தங்கதுரை உத்தரவின் பேரில், ஓசூர் டிஎஸ்பி பாபுபிரசாத் அறிவுரை பேரில், மத்திகிரி மற்றும் சிப்காட் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பான் மசாலா மற்றும் குட்கா பொருட்களை, எஸ்ஐ.பிரகாஷ் தலைமையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது சில கடைகளில் குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், பான் மசாலா மற்றும் குட்கா பொருட்களை விற்பனை செய்து வரும் நபர்கள் மீது, கடந்த மே மாதத்தில் 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து இக்குற்ற வழக்கில் ஈடுபட்ட கடைகளுக்கு, உணவு பாதுகாப்பு அலுவலர் முத்து மாரியப்பன் உதவியுடன், கடந்த 2 நாட்களில் மத்திகிரி மற்றும் சிப்காட் காவல் நிலைய பகுதியில் சுமார் 10 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. இதுபோன்று குற்றங்களில் ஈடுபவர்கள் மீது, கடும் சட்ட நடவடிக்கை தொடரும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை