ஒளிப்பதிவு திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திரையுலகினர் சந்திப்பு

சென்னை: ஒன்றிய அரசு கொண்டு  வந்துள்ள ஒளிப்பதிவு திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் திரையுலகினர் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர். இந்திய ஒளிப்பதிவு மசோதாவில் 4 திருத்தங்களை கொண்டு வர ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இதில் முக்கியமான திருத்தமான, படம் வெளியான பிறகும் ஒன்றிய அரசு படத்தை மறுதணிக்கைக்கு உட்படுத்தலாம் என்பதாகும். இதை தமிழ்ப் படவுலகினர் உள்பட திரையுலகினர் பலரும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் கார்த்தி, தயாரிப்பாளர் சங்க தலைவர் முரளி ராமநாராயணன் மற்றும் சங்க நிர்வாகிகள் தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று சந்தித்தனர். அப்போது ஒளிப்பதிவு திருத்த மசோதாவுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என அவர்கள் முதல்வரிடம் கோரிக்கை விடுத்தனர்.பின்னர் வெளிய வந்ததும் நிருபர்களிடம் கார்த்தி கூறியதாவது: ஒளிப்பதிவு திருத்த மசோதா, திரையுலகினரின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் உள்ளது. இது கருத்து குரல்வளையை நெரிக்கும் சட்டமாகும். திரைப்பட உலகினரை பாதிக்க செய்யும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க அனைத்து தரப்பினரும் ஆதரவு தருவார்கள் என  நம்புகிறேன். இந்த திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். ஒன்றிய அரசின் இந்த மசோதாவை தமிழ் திரையுலகினர் ஒட்டுமொத்தமாக எதிர்க்கிறோம். இவ்வாறு கார்த்தி கூறினார்.நடிகை ரோகினி: கலை  படைப்புகள் மக்களுக்கு சென்று சேரவேண்டும் என்றால் கருத்து சுதந்திரம்  முக்கியம், மக்களுடைய வாழ்க்கை பற்றி பேசுகிற படைப்புகளின் குரல்வளையை  நெறிக்கிற மாதிரியான விஷயத்தை செய்கிறார்கள். அதை செய்ய விடக்கூடாது.  திரைத் துறையை பாதுகாப்பற்ற ஒரு இடத்துக்கு கொண்டு செல்ல  முயற்சிக்கிறார்கள். இது ஒட்டு மொத்த திரைத்துறையையே பாதிக்கும். தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி ராமசாமி: பல கோடி  முதலீடு செய்யும் தயாரிப்பாளர்களுக்கு தொழில் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை  உருவாகி உள்ளது. ஆண்டுக்கு 200 படங்கள் வெளிவருகிறது. ஏதோ ஒரு  காரணத்துக்காக படம் நிறுத்தப்பட்டால் என்ன ஆகும். இது கருத்து  சுதத்திரத்திற்கு எதிரானது மட்டுமல்ல தொழில் பாதுகாப்புக்கும் எதிரானது….

Related posts

மாநில கல்லூரியில் ரூ.21 கோடி மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு லிப்ட் வசதியுடன் பிரத்யேக விடுதி: விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது

சென்னையில் வடகிழக்கு பருவ மழையின்போது மீட்பு பணிகளில் ஈடுபட 10,000 பேருக்கு பயிற்சி: பேரிடர் மேலாண்மை துறை திட்டம்

தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்: இ.கருணாநிதி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்