ஒற்றுமை யாத்திரை சரித்திர வெற்றி பெறும் சச்சின் பைலட் தகவல்

புதுடெல்லி: ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.  கெலாட்டுக்கும் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் இடையே கடும் மோதல் நிலவுகிறது.கட்சி ேமலிடம் தலையிட்டு இருவருக்கு இடையே சமரசம் செய்து வைத்துள்ளது. இந்த நிலையில் ராகுல் காந்தி எம்பி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நடைபயணம் நேற்று மாலை ராஜஸ்தானில் உள்ள ஜலாவாரில் நுழைந்தது. இந்நிலையில், சச்சின் பைலட் நேற்று காலை கூறும்போது,‘‘  ராஜஸ்தானில் ஒற்றுமை யாத்திரை வெற்றி அடைவதற்கு தீவிரமாக உழைத்து வருகிறோம். அதை விட அடுத்தாண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் வென்று ஆட்சியை தக்க வைப்பதே முக்கிய குறிக்கோள்.ராஜஸ்தானில் ஒவ்வொரு 5 ஆண்டும் ஆட்சி மாறும்.அந்த நடைமுறையை மாற்ற காங்கிரசார் ஒற்றுமையுடன் வேலை செய்கின்றனர். ஒற்றுமை யாத்திரை மாநிலத்தில் சரித்திர வெற்றி அடையும்’’ என்றார்….

Related posts

மராட்டியம், உ.பி., தெலங்கானா, குஜராத் சோதனையில் ரூ.327 கோடி மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்: 15 பேரை கைது செய்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை

ஜிஎஸ்டி ரசீதுகளின் அடிப்படையில் 15 நிமிடங்களில் கடன்!.. குறு, சிறு நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் கடன் வழங்கும் எஸ்பிஐ..!!

திருச்சூரில் அடர்வனத்தைவிட்டு வெளிவந்த காட்டு யானை: மக்கள் குடியிருப்புகளில் புகுந்ததால் பரபரப்பு