ஒற்றுமையை வளர்க்கும் மீன்பிடித் திருவிழா-மகிழ்ச்சியுடன் மீன்களை அள்ளிய மக்கள்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் அடியனூத்து ஊராட்சியில் உள்ள பெருமாள் கோவில்பட்டி கிராமத்தில் நடந்த மீன்பிடித் திருவிழாவில் இளைஞர்கள், பொது மக்கள் என அனைவரும்  மீன்களை அள்ளினர்.திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அடியனூத்து ஊராட்சியில் உள்ளது பெருமாள் கோவில்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் சொந்த பந்தங்களை இணைக்கும் மற்றும் சுற்று வட்டார கிராமங்களிடையே ஒற்றுமையை உருவாக்கும் மீன்பிடி திருவிழா நடக்கும்.இந்நிலையில், நேற்று குளக்கரையில் அமைந்துள்ள கன்னிமர் கோயிலில் சிறப்பு பூஜை நடத்திய பின்னர், ஊர் நாட்டண்மை வெள்ளை துண்டை வீசி நேற்று மீன் திருவிழாவை தொடங்கி வைத்தார். அப்போது கரைகளில் வலைகளுடன் நின்று இருந்த அனைத்து தரப்பு வயது ஆண்கள், பெண்கள் தண்ணீருக்குள் இறங்கி மீன்களை வலை போட்டு பிடித்தனர், இத்திருவிழாவில் நல்லாம்பட்டி, பெருமாள் கோவில்பட்டி, வாழைக்காய் பட்டி, கண்ணாபட்டி, வேடபட்டி உட்பட 10 கிராமங்களைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.இதுகுறித்து மக்கள் கூறுகையில், ‘‘இந்த மீன்பிடி திருவிழாவில் ஜிலேபி, குறவை, கெண்டை மீன் என பல வகையான மீன்களை பிடித்தோம். இந்த திருவிழாவை எந்தவித வேறுபாடும், பாகுபாடும் இன்றி ஒற்றுமையுடன், மகிழ்ச்சியுடன் கொண்டாடினோம், என்றனர்….

Related posts

திண்டிவனம் அருகே கிரிக்கெட் விளையாடியபோது மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு

மதுரை திருமங்கலத்தில் கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை முயற்சி

சதுரகிரி மலைக் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்