ஒரே நாளில் 3 மின் உற்பத்தி நிலையங்களை தாக்கி அழித்த ரஷ்ய ராணுவம்: மின்சாரமின்றி உக்ரைனின் பல்வேறு பகுதிகள் இருளில் மூழ்கின

கீவ்: மின்சார உற்பத்தி நிலையங்களை குறிவைத்து ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருவதால் உக்ரைன் நாட்டின் பல்வேறு பகுதி இருளில் மூழ்கியுள்ளன. கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைக்கும் பாலத்தில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு உக்ரைன் தான் காரணம் என குற்றம் சாட்டிய ரஷ்யா உக்ரைன் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியது. மின் உற்பத்தி நிலையங்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களால் தலைநகர் கீவ் உள்ளிட்ட நகரங்கள் இருளில் மூழ்கியுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 3 மின்சார உற்பத்தி நிலையங்கள் ரஷ்ய தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக கூறியிருக்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சீரமைப்பு பணி முழு வீச்சில் நடைபெற்று வந்தாலும் முழு அளவில் புனரமைக்க அதிக காலம் பிடிக்கும் என்றார். மின் உற்பத்தி நிலையங்கள் குறிவைத்து தாக்கப்பட்டு அழிக்கப்படுவதால் உக்ரைன் முழுவதும் நூற்றுக்கணக்கான நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு மின்சார விநியோக சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மின்சார உபயோகத்தை குறைக்கும் விதமாக அவசியமற்ற மின்சாதன பயன்பாடுகளை தவிர்க்க வேண்டும் என்று உக்ரைன் கோரிக்கை விடுத்துள்ளது. உக்ரைனில் தற்போது குளிர் காலம் தொடங்கி இருப்பதால் மின்தடை காரணமாக ஹீட்டர்களை  பயன்படுத்த முடியாமல் மக்கள் கடும் குளிரில் தவித்து வருகின்றனர். இதனிடையே ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட உக்ரைன் பிராந்தியங்கள் ராணுவ சட்டம் அமல் படுத்தப்படுவதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்திருக்கிறார்.        …

Related posts

பாரீஸ் ஒலிம்பிக்: இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றார் மனு பாக்கர்

காசா மீதான தாக்குதலுக்கு பதிலடி இஸ்ரேல் நிலைகள் மீது 70 ராக்கெட் வீச்சு: களத்தில் இறங்கியது ஹிஸ்புல்லா

பாரீஸ் ஒலிம்பிக்: வில்வித்தை கலப்பு பிரிவில் இந்திய அணி காலிறுதிக்கு தகுதி