ஒரே ஆண்டில் கேஸ் விலை ரூ.190 உயர்வு :வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ. 1,000-ஐ தாண்டியது… அதிர்ச்சியில் மக்கள்!!

சேலம்: சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது.இதில், பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றி அமைக்கும் நடைமுறையையும், காஸ் சிலிண்டர் விலையை மாதத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை மாற்றியமைக்கும் நடைமுறையும் பின்பற்றப்படுகிறது. இந்த வகையில், காஸ் சிலிண்டருக்கான விலையை உ.பி., பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில தேர்தலின் காரணமாக நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் உயர்த்தாமல் ஒரே நிலையில் வைத்திருந்தனர். தேர்தல் முடிந்ததும், திடீரென மார்ச் 22ம் தேதி வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை ரூ.50 அதிகரிக்கப்பட்டது. இதனால், சென்னையில் ரூ.965.50 என விலை உயர்ந்தது. இந்த விலையில் கடந்த மாதம் (ஏப்ரல்) மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.இந்நிலையில், நடப்பு மாதத்திற்கான காஸ் சிலிண்டர் விலையை, இன்று அதிகாலை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு அறிவித்தது. இதன்படி, நாடு முழுவதும் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.  இதன் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 1,015 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனையாகிறது. இதன்மூலம் ஒரே ஆண்டில் சமையல் கேஸ் சிலிண்டர் விலை 190 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.  கடந்த சில நாட்களுக்கு முன்பு வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.102.50 அதிகரிக்கப்பட்டது. இதனால், கடந்த மாத (ஏப்ரல்)  விலையான ரூ.2,405.50ல் இருந்து ரூ.102.50 அதிகரித்து ரூ.2,508 ஆக நிர்ணயிக்கப்பட்டது. விலைவாசி கடுமையாக உயர்ந்து வரும் நேரத்தில் சிலிண்டர் விலை உயர்வால் பொதுமக்கள் கலக்கமடைந்துள்ளனர். …

Related posts

தங்கம் விலையில் மாற்றமில்லை

செப் 09: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்