ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 550 பயனாளிகளுக்கு தலா 2 தென்னங்கன்றுகள்: கிருஷ்ணசாமி எம்எல்ஏ வழங்கினார்

 

திருவள்ளூர்: கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், தொட்டிக்கலை ஊராட்சி மற்றும் ஈக்காடு ஊராட்சியில் 550 பயனாளிகளுக்கு தலா 2 தென்னங்கன்றுளை கிருஷ்ணசாமி எம்எல்ஏ வழங்கினார். தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை மூலம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் திருவள்ளூர் ஒன்றியம், தொட்டிக்கலை ஊராட்சியில் 300 பயனாளிகளுக்கு தலா 2 தென்னங்கன்றுகளும் மற்றும் மண்வெட்டி, கடப்பாரை, பாண்டு, கிரும்மி நாசினிக் கருவி, விதையிடும் கருவிகளும், பால் கேன்களும் வழங்கும் விழா நேற்று நடந்தது.

இதில், திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் பிரேம் ஆனந்த், ஒன்றிய நிர்வாகிகள் ஜெயராமன், ரமேஷ், பாலவிநாயகம், திலிப்ராஜ், இம்மானுவேல், அணிகளின் நிர்வாகிகள் குமரேசன், எட்வின், உதயக்குமார், ராஜேஷ், ஒன்றிய கவுன்சிலர் வேதவல்லி சதீஷ்குமார், ஊராட்சித் தலைவர் சீனிவாசன், ஆதவன் பாஸ்கரன், ஸ்ரீதர், கசுவா ராஜி, அரவிந்த், சுரேஷ், பாலாஜி, சதிஷ், பார்த்திபன், ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண்மை உதவி இயக்குனர் ஸ்ரீ சங்கரி, வேளாண்மை அலுவலர் சுபஸ்ரீ, உதவி அலுவலர் திவ்யபாரதி ஆகியோர் வரவேற்றனர். இந்த விழாவிற்கு, பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். பின்னர், 300 பயனாளிகளுக்கு தலா 2 தென்னங்கன்றுகளையும், வேளாண் கருவிகளையும் வழங்கினார்.

இதனை தொடர்ந்து, ஈக்காடு ஊராட்சியில் 250 பயனாளிகளுக்கு தலா 2 தென்னங்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு ஒன்றியக் குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன், திமுக ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன், ஜெயசீலன், பொதுக்குழு உறுப்பினரும், ஒன்றிய கவுன்சிலருமான எத்திராஜ், ஒன்றிய குழு துணைத் தலைவர் பர்கத்துல்லா கான், ஒன்றிய கவுன்சிலர் சரத்பாபு, ஊராட்சி மன்ற தலைவர் லாசனா சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழாவிற்கு, பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி தலைமை தாங்கி 250 பயனாளிகளுக்கு தலா 2 தென்னங்கன்றுகளை வழங்கினார். இதில் நிர்வாகிகள் பிராங்ளின், வேலாயுதம், ஈகை கருணாகரன், ஜஸ்டின்பால், பலராமன், சந்தோஷ், தமிழ்வாணன், முருகேசன், ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்