ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சமரச மைய முத்தரப்பு கூட்டம்: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பங்கேற்பு

பெரம்பலூர், ஜூன் 25: பெரம்பலூர் மாவட்டஒருங்கி ணைந்த நீதிமன்றத்தில் சமரச மையம் சார்பாக நட ந்த முத்தரப்புக் கூட்டத்தில் காணொளி வாயிலாக சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் மாலா கலந்து கொண்டார். பெரம்பலூர் மாவட்டஒருங் கிணைந்த நீதிமன்றத்தின் சமரச மையம் சார்பாக நீதி பதிகள், சமரச மைய தீர்வா ளர்கள்மற்றும் வழக்கறிஞர் கள் ஒருங்கிணைந்த முத்த ரப்புக் கூட்டம் சமரச மைய நீதிமன்ற கூட்ட அரங்கில் நேற்று(24தேதி) நடைபெற் றது. இதில் காணொளி வா யிலாக பெரம்பலூர் மாவ ட்டபோர்ட் போலியோ நீதிய ரசர் (சென்னை உயர் நீதிம ன்றம்) மாலா கலந்து கொண்டார். சென்னை உயர் நீதிமன்ற சமரசம் மற்றும் மாற்றுத் தீர்வாயத்தின் தமிழக மூத் த பயிற்சியாளர் பத்மா நே ரடியாக கூட்டத்தில் பங்கே ற்று ஆலோசனைகள் வழங் கினார். முத்தரப்புக் கூட்டத் திற்கு பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பல்கீஸ் முன்னிலை வகித் தார். குடும்ப நலம், தலை மைக் குற்றவியல், உரிமை யியல், சார்பு மற்றும் குற்ற வியல் உள்ளிட்ட அனைத்து நீதிமன்ற நீதிபதிகளும் கல ந்துகொண்டனர்.

பெரம்பலூர் மாவட்ட வழக் கறிஞர்கள் சங்க தலைவர் வள்ளுவன் நம்பி, அட்வக் கேட் அசோசியேஷன் சங்க தலைவர் மணிவண்ணன், மற்றும் அரசு வழக்கறிஞர் கள் செந்தில்நாதன், சந்தா னலெட்சுமி, சுரேஷ், சுந்தர் ராஜன், புகழேந்தி, கோவிந் தராஜன், சமரச மைய கண் காணிப்புக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணமூர்த்தி மற் றும் சமரச மைய வழக்கறி ஞர்கள் உட்பட அனைத்து வழக்கறிஞர்களும் இதில் பங்கு பெற்று சமரசம் குறி த்து பேசினர். பெரம்பலூர் மாவட்ட கூடுதல் உரிமையி யல் நீதிபதி மகாலட்சுமி, குற்றவியல் நீதிமன்றம் நடு வர் என்-1 நீதித்துறை நடு வர் சுப்புலட்சுமி ஆகியோர் நிகழ்ச்சிகளை தொகுத்து பேசினர். முன்னதாக பெர ம்பலூர் குடும்பநல நீதிபதி தனசேகரன் வரவேற்றார். இறுதியில் சமரச மைய ஒ ருங்கிணைப்பாளரும், சார் பு நீதிபதியுமாகிய சந்திர சேகர் நன்றி தெரிவித்தார்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்