ஒரத்தநாடு அருகே அபாய நிலையில் நீர்த்தேக்கத்தொட்டி செல்வ மகாகாளியம்மன் ஆலய திருநடன திருவிழா

 

கும்பகோணம், ஜூலை 23: கும்பகோணம் அருகே பாபநாசம் செல்வ மகாகாளியம்மன் ஆலயத்தில் காளியம்மன் திருநடன திருவிழா நடந்தது. தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் கஞ்சிமேடு செல்வ மகாகாளியம்மன் ஆலயத்தில் காளியம்மன் திருநடன திருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. செல்வ மகாகாளியம்மன் படுகளம் பார்த்து திருநடன திருவிழா நடைபெற்றது. அப்போது பாபநாசம் பகுதியில் முக்கிய வீதிகள் வழியாக காளி, திருநடன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பக்தர்கள் தங்கள் இல்லங்களுக்கு காளியம்மனை அழைத்து சிறப்பு வழிபட்டனர். விழாவில் பாபநாசம் கஞ்சி மேடு செல்வ மகாகாளியம்மன் திருக்கோயில் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Related posts

துறையூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் 326 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

கண்ணுக்குழி ஊராட்சியில் புதிய பேருந்து வழித்தடம் துவக்கம்

நெல்லில் நவீன ரக தொழில் நுட்ப பயிற்சி