ஒரத்தநாடு அரசு பள்ளியில் உலக பிளாஸ்டிக் ஒழிப்புதின விழிப்புணர்வு பேரணி

 

ஒரத்தநாடு, ஜூலை 6: ஒரத்தநாடு அருகே திருமங்கலக்கோட்டைகீழையூர் அரசு மேல் நிலைப் பள்ளியில் உலக பிளாஸ்டிக் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள திருமங்கலக்கோட்டை கீழையூர் அரசு மேல் நிலைப் பள்ளியில் பசுமைப்படை சார்பாக விழிப்புணர்வு நடந்தது.

இதில் பள்ளி மாணவ மாணவிகள் ‘நெகிழியை ஒழிப்போம்! மீண்டும் மஞ்சப்பையை எடுப்போம்!’ என்ற வாசகம் பதிந்த பிளக்ஸ் பேனருடன் சென்றனர். பேரணி திருமங்கல கோட்டை கீழையூர் அனைத்து தெருக்களின் வழியாக ஊர்வலமாக சென்றது. இந்த பேரணியை பள்ளியின் தலைமை ஆசிரியர் வளர்மதி தொடங்கி வைத்தார். பேரணி ஏற்பாடுகளை பசுமைப்படை தலைவர் ஆசிரியர் ஆறுமுகம் ஏற்பாடு செய்திருந்தார்.

Related posts

ஆர்வத்துடன் மீன்பிடிக்கும் இளைஞர்கள்

நென்மேனி சாலையில் ரயில்வே மேம்பால பணி விரைவில் தொடங்குமா? மக்கள் எதிர்பார்ப்பு

உணவுகளை தயாரிக்க சுத்தமான தண்ணீர் பயன்படுத்த வேண்டும்: உணவகங்களுக்கு அறிவுறுத்தல்