ஒப்பந்த அடிப்படையில் சாகர்மித்ரா ஊழியர்கள் தேர்வு

தூத்துக்குடி, ஜூன் 7: பிரதமரின் மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் வெள்ளப்பட்டி, பழையகாயல் பகுதிகளில் ஒப்பந்த அடிப்படையில் சாகர் மித்ரா என்னும் பல்நோக்கு சேவை ஊழியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணியில் சேர 1.7.22 அன்று 35 வயது நிறைவடையாதவர்களாக இருக்க வேண்டும். மீன்வள அறிவியல், கடல் உயிரியல், விலங்கியல் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வெள்ளப்பட்டி, பழையகாயல் சுற்றுவட்டார பகுதிகளில் வசித்து வரும் தகுதியான நபர்கள் வருகிற 20.6.23க்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு வடக்கு கடற்கரை சாலையில் உள்ள தூத்துக்குடி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 0461-2320458 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்