ஒன்றிய அரசை கண்டித்து 26ம் தேதிஆர்ப்பாட்டம்: முத்தரசன் பேட்டி

புதுச்சேரி:  புதுச்சேரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:நாட்டின் விடுதலை போராட்டத்தில் பங்கேற்ற தலைவர்களின் படங்கள் இடம் பெற்ற தமிழக அலங்கார ஊர்தி புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் கடந்த 17ம் தேதி முதல் தொடர்ந்து போராடி வருகிறோம். வருகிற 26ம் தேதி மாநில கட்சி அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றி வைத்துவிட்டு நல்லக்கண்ணு தலைமையில் சென்னையில் ஒன்றிய அரசின் மோசமான செயலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும். தமிழகத்தில் முன்னாள் அமைச்சர்களை பழிவாங்கும் வேலையில் ஈடுபடுவதாக இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் சொல்கிறார்கள். ஆகையால், அடுத்து அவர்களும் விசாரிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது. தமிழகத்தில் தரமான பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. ஒருசில இடங்களில் குறைபாடு ஏற்பட்டுள்ளது. அந்த இடங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்….

Related posts

மேட்டுப்பாளையம்-கோத்தகிரி மலைப்பாதையில் உலா வரும் காட்டு யானை : வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

அமராவதி முதலை பண்ணைக்குள் சுற்றுலா பயணி தொலைத்த 3 பவுன் நகையை கண்டெடுத்து ஒப்படைத்த சிறுவர்கள்

பாஸ்போர்ட் இணையதளம் இயங்காது