ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கும்பகோணம், ஜூலை 7: கும்பகோணத்தில் டெல்லியில் தெரு வியாபாரி மீதான வழக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம நடந்தது. குற்றவியல் சட்டம் பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின்கீழ் புது தில்லி ரயில் நிலையம் அருகில் வியாபாரம் செய்த தெரு வியாபாரி மீது வழக்கு பதிவு செய்த ஒன்றிய அரசை கண்டித்தும், தெரு வியாபாரிகள் பாதுகாப்பு சட்டத்தை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தக் கோரியம், புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 3 குற்றவியல் சட்டங்களை நிறுத்திவைக்க வலியுறுத்தியும், ஏஐடியூசி தெரு வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் நேற்று கும்பகோணம் தலைமை அஞ்சலகம் முன்பு மாவட்ட தலைவர் சிவக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஏஐடியுசி மாநில செயலாளர் தில்லைவனம், தெரு வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் முத்துகுமரன், பட்டு கைத்தறி நெசவாளர் சங்க மாவட்ட நிர்வாகி மணிமூர்த்தி, நிர்வாகிகள் சரவணன், பாலகிருஷ்ணன், நாராயணன், பப்பு. முருகவேல், காமராஜ், ரமேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்று ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர்.

 

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை