ஒன்றிய அரசு பணியாளர் தேர்வுக்கு இலவச பயிற்சி: மே3 க்குள் விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூர், ஏப்.16: மத்திய பணியாளர்கள் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலான தேர்விற்கு விருப்பமுள்ளர்கள் மே3ம் தேதிக்குள் விண்ணப்பித்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தின் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து பயன்பெறலாம். பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது: மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் (Staff Selection Commission, Government of India) ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலானத் தேர்வு-2023 (Combined Gradu ate Level Examination, 2023)” தொடர்பான அறிவிப்பை ஏப்-3ம் தேதியன்று வெளியிட்டுள்ளது.

ஒன்றிய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அரசியலமைப்பு சார்ந்த அமைப்புகள், சட்டப்பூர்வ அமைப்புகள், தீர்ப்பாயங்கள் போ ன்றவற்றில் உள்ள குரூப் “B” மற்றும் குரூப் “C” நிலையில், 7,500-ற்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களை அறிவித்துள்ளது. இத்தேர்வில் நாட்டில் உள்ள தகுதியுடைய விண்ணப்ப தாரர்கள் அனைவரும் வி ண்ணப்பிக்கலாம். பணியி டங்களின் விவரம், வயது வரம்பு, தேவையான கல் வித் தகுதி, செலுத்தவேண் டிய கட்டணம், தேர்வுத் திட் டம், விண்ணப்பிக்கும் மு றை போன்ற விவரங்கள் ஆள்சேர்ப்பு அறிவிப்பில் (Recruitment Notice) விரிவாக வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இவ்விவரங்கள் இணையதள முகவரியிலும் உள்ளது. இப்பணிக் காலியிடங்களுக்கு www. ssc.nic.in என்ற பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். கணினி அடிப்படையிலான இத் தேர்வுகளுக்கு உரிய கட்டணத்துடன் இணைய வழியாக விண்ணப்பிக்க கடைசி நாள் மே 3ம் தேதியாகும். ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் மே-4ம் தேதியாகும். தென் மண்டலத்தில், கணினிஅடிப்படையி லானதேர்வு, ஜூலை 2023ல் ஆந்திரப்பிரதேச மாநிலத் தில் 10 மையங்களிலும், புதுச்சேரியில் 1 மையத்தி லும், தமிழ்நாட்டில் 7 மைய ங்களிலும், தெலுங்கானா மாநிலத்தில் 3 மையங்களி லும் ஆக மொத்தம் 21 மை யங்கள், நகரங்களில் நடை பெற உள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மாவட்டவேலைவாய் ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வப் பயிலும் வட்டங்களில் பணி யாளர் தேர்வாணைய போ ட்டித் தேர்வுகளுக்கான (Staff Selection Commission Exam – CGL) கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நேரடி யாக நடத்தப்படவுள்ளன. இத்தேர்விற்கான பாடத்தி ட்டங்கள் மற்றும் பாடக்குறிப்புகள் தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் ப யிற்சித் துறையின் மெய்நிகர் கற்றல் இணையதளத்தில் ( rservices.tn.gov.in/ ) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், இவ்விணையதளத்தில் ‘TN Career Services Employment’ மற்றும் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் ‘AIM TN’ என்ற YouTube Channel-களில் பதி வேற்றம் செய்யப்பட்டுள்ள இத்தேர்விற்கான காணொளிகளை கண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. எனவே, இத்தேர்வி ற்கு விண்ணப்பித்த மற் றும் விண்ணப்பிக்க விரும் பும் மாணவர்கள் உரிய மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தினைத் தொடர்பு கொண்டு இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயனடையுமாறு கலெக்டர் கற்பகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை