ஒன்றிய அரசு தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்ப பெற வேண்டும்

 

திருப்பூர்,பிப்.2: திருப்பூர் மாவட்ட அனைத்து பனியன் தொழிற்சங்கங்களின் கூட்டம் பி.என்.ரோட்டில் உள்ள -ஏ.ஐ.டி.யு.சி. பனியன் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு பனியன் பேக்டரி லேபர் யூனியன் ஏ.ஐ.டி.யு.சி. சங்க பொதுச்செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். இதில் பனியன் சங்க செயலாளர் செந்தில்குமார், சி.ஐ.டி.யு. பனியன் சங்க தலைவர் மூர்த்தி, எல்.பி.எப். பனியன் சங்க தலைவர் பாலசுப்பிரமணியம், பொருளாளர் பூபதி, ஐ.என்.டி.யு.சி. மாவட்ட செயலாளர் சிவசாமி, எச்.எம்.எஸ். மாவட்ட செயலாளர் முத்துசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ஒன்றிய அரசின் தவறான பொருளாதார கொள்கையினை கண்டித்தும், தொழிலாளர் மற்றும் விவசாயிகள் நலன்களுக்கு விரோத செயல்படும் ஒன்றிய அரசை கண்டிப்பது, இது தொடர்பாக தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக வருகிற 16ம் தேதி நாடு முழுவதும் பொது வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடத்த அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாய முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.

இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கோரிக்கைகளை விளக்கி ஆயிரம் நோட்டீஸ் ஒட்டுவது. தொழிலாளர் விரோத சட்டங்களை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு