ஒன்றிய அரசின் டிஜிட்டல் மயம்

திருவாரூர், செப். 12: ஒன்றிய அரசின் டிஜிட்டல் மயம் காரணமாக கோடிக்கணக்கான குத்தகை விவசாயிகள் பாதிக்கப்படுவதால் இந்த திட்டதை மறுபரிசீலனை செய்யவேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அதன் மாநில பொது செயலாளர் மாசிலாமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வேளாண் துறை செயலாக்கத்தை டிஜிட்டல் மயமாக்கிட ஒன்றிய அரசு இதற்குரிய பணிகளை தொடங்கியுள்ளது. இதில் ஒரு அங்கமாக நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிரத்யேக அடையாள அட்டை வழங்க முடிவு எடுத்து விவசாயிகளின் பெயர் உள்ளிட்ட விபரங்களை அறிந்திட அடுத்த மாதம் பதிவு தொடங்கி முடித்திட ரூ.2 ஆயிரத்து 817 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2025ம் ஆண்டு மார்ச்க்குள் 5 கோடி விவசாயிகளை பற்றிய விவரங்களை பதிவு செய்து இந்த பிரத்யேக அடையாள அட்டை வழங்கப்பட உள்ளதாக ஒன்றிய வேளாண் துறை செயலர் தேவேஸ் சதுர்வேதி அறிவித்துள்ளார். ஒன்றிய அரசால் கொடுக்கப்படும் இந்த அடையாள அட்டையை அடிப்படையாக கொண்டுதான் விவசாயிகளுக்கான அரசின் திட்டங்கள் அனைத்தும் இனிகிடைக்க வாய்ப்புள்ளது. ஆதார்அட்டை எப்படி ஒரு நபருக்கு அனைத்து வகையான அடையாளமாக எடுத்துக் கொள்ளப்படுகிறதோ அதுபோல் அரசு வழங்க போகும் அடையாள அட்டை பெற்றவர்களுக்கு மட்டுமே அரசால் செயல்படுத்தப்படும் விவசாயத் திட்டங்கள் மற்றும் சலுகைகள் கிடைக்கும்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி