ஒன்றிய அரசின் சட்ட திருத்தங்களை வாபஸ் பெறக்கோரி

பெரம்பலூர், ஜூலை 4: முப்பெரும் சட்டங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள சட்ட திருத்தங்களை ஒன்றிய அரசு வாபஸ்பெற வலியுறுத்தி பெரம்பலூரில் அட்வகேட் அசோசியேசன் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முப்பெரும் சட்டங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள சட்ட திருத்தங்களை ஒன்றிய அரசு வாபஸ்பெற வலியுறுத்தியும், ஏற்கனவே நடை முறையில் இருந்தபடி, முப்பெரும் சட்டங்களை மீண்டும் நடைமுறைப் படுத்த வலியுறுத்தியும், பெரம்பலூரில் அட்வகேட் அசோசி யேசன் சங்கத்தினர் நீதி மன்றப் பணிகளை புறக் கணித்துவிட்டு, பெரம்ப லூர் மாவட்ட ஒருங்கிணை ந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, பெரம்பலூர் அட்வகேட் அசோசியேசன் சங்கத்தின் தலைவர் செந்தாமரைக் கண்ணன் தலைமை வகித்தார். செயலாளர் முத்துசாமி, பொருளாளர் குணாளன் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் முகமது இலியாஸ், தமிழ்ச்செல் வன், சஞ்சீவிராஜன், அரு ணன், கணேசன், ரத்தின வேல், கனகராஜ் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

2வது நாளாக நேற்று (3ம் தேதி) புதன்கிழமை காலை 11 மணிக்கு அட்வகேட் அசோசியேசன் சங்கத்தினர் நீதி மன்றப் பணிகளை புறக்கணித்து விட்டு பெரம்பலூர் தலைமைத் தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, பெரம்பலூர் அட்வகேட் அசோசியேசன் சங்கத்தின் தலைவர் செந்தாமரைக் கண்ணன் தலைமை வகித்தார். செயலாளர் முத்துசாமி, பொருளாளர் குணாளன் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 2 பெண் வழக்கறிஞர்கள் உள்பட 25 பேர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை