ஒன்றிய அரசின் கல்வி உதவி தொகை குறித்து விழிப்புணர்வு மாணவர்களின் விவரங்கள் அனுப்பி வைக்க வேண்டும்: பள்ளி கல்வி இணை இயக்குநர்களுக்கு உத்தரவு

சென்னை: பள்ளி கல்வி இணை இயக்குநர் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: கல்வி உதவித்தொகை பிற்படுத்தப்பட்டோர் நலம் மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், என்ஐடி, ஐஐஐடி மற்றும் மத்திய பல்கலைக் கழகங்களில் பயிலும் தமிழ்நாட்டை சார்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பள்ளிக்கல்வி இறுதியாண்டு பயிலும் மாணவர்களின் விவரங்களை அனுப்ப வேண்டும். இதற்காக மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் தமிழ்நாட்டின் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியருக்கான கல்வி உதவித்தொகை திட்டம் குறித்து தற்போது பள்ளியில் இறுதியாண்டு (+2) பயிலும் மாணவர்களுக்கு SMS மற்றும் வாட்ஸ் அப் செயலிகள் மூலம் விளம்பரம் அளிக்க ஏதுவாக 2021-22ம் கல்வி ஆண்டில் பள்ளிக்கல்வி இறுதியாண்டு (+2) பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிறப்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியர்களின் விவரங்கள் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்ய வேண்டும்.  அந்த படிவ அறிக்கையினை இ-மெயில் மூலம் சார்ந்த மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தின் மூலம் சென்னை பிற்படுத்தப்பட்டோர் நல இயக்குநரகத்திற்கு உடன் அனுப்பி வைக்கவும், அதன் நகலினை இவ்வலுவலகத்திற்கு அனுப்பவும், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களை கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை