ஒன்றிய அமைச்சராகிறார் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் : புதிய அமைச்சரவையின் பெயர் பட்டியல் வெளியீடு

டெல்லி : பிரதமர் மோடி தலைமையில் விரிவாக்கம் செய்யப்படவுள்ள புதிய அமைச்சரவையின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டது.புதிதாக பதவியேற்க உள்ள 43 ஒன்றிய அமைச்சர்களின் பெயர் பட்டியல் வெளியாகி உள்ளது.தமிழகத்தைச் சேர்ந்த மாநில பாஜக தலைவர் எல் முருகன் ஒன்றிய அமைச்சராக பதவியேற்க உள்ளார். ஜோதிராதித்ய சிந்தியா, பசுபதி குமார் பராஸ், பூபேந்தர் யாதவ், அனுப்ரியா படேல், ஷோபா கரண்ட்லாஜே, மீனாட்சி லேக்கி, அஜய் பட், அனுராக் சிங் தாக்கூர், நாராயண் தாட்டு ரானே, சர்பானந்த சோனோவால், வீரேந்திர குமார், கிரண் ரிஜிஜு, கிஷண் ரெட்டி,  அனுபமா தேவி,  அஷ்வினி வைஷ்ணவ், சாந்தனு தாக்குர், பிஸ்வேஸ்வார் துடு, கவுசல் கிஷோர், ஏ.நாராயணசாமி, அன்னபூர்ணா தேவி, பி.எல். வர்மா ஆகியோரும் ஒன்றிய அமைச்சராக பதவியேற்கின்றனர். ஒன்றிய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அமைச்சர்கள், “ஹர்ஷ்வர்தன், தாவர் சந்த் கெலோட், ரமேஷ் பொக்கிரியால், சதானாந்த கௌடா, சந்தோஷ் கங்வார், தேபஸ்ரீ சௌதுரி, ரத்தன் லால் கட்டாரியா, சஞ்ஜய் தோட்ரே, பிரதாப் சந்திர சாரங்கி மற்றும் ரோசப் பாட்டீல், பாபுல் சுப்ரியோ, அஸ்வினி சௌபே ” ஆகிய 12 ஒன்றிய அமைச்சர்கள் தங்கள் ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளனர். …

Related posts

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி

கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்து சஸ்பென்ட் ஆன சிஐஎஸ்எப் காவலர் பெங்களூருவுக்கு பணியிட மாற்றம்