ஒன்றிய அமைச்சரவை 14ல் மீண்டும் கூடுகிறது

புதுடெல்லி: ஒன்றிய அமைச்சரவையின் கூட்டம் வரும் 14ம் தேதி நடக்கிறது.கடந்த 2019ல் 2வது முறையாக நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிரதமர் மோடி, கடந்த 7ம் தேதி தனது அமைச்சரவையை முதல் முறையாக விரிவாக்கம் செய்தார். 53 அமைச்சர்கள் மட்டுமே பங்கேற்று இருந்த அமைச்சரவையை 78 ஆக உயர்த்தினார். புதிதாக 43 பேர் பதவியேற்றனர். அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட மறுதினமே, அவர் தனது அமைச்சரவை கூட்டத்தை நடத்தி, கொரோனா தடுப்பு பணிக்கு ரூ.23 ஆயிரம் கோடி, விவசாய திட்டங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி ஆகியவற்றை ஒதுக்கீடு செய்தார்.இந்நிலையில், அவர் வரும் 14ம் தேதி மீண்டும் அமைச்சரவை கூட்டத்தை கூட்டுகிறார். இதில், பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது….

Related posts

உ.பி.யில் 121 பேர் பலியான சம்பவம் எதிரொலி; ஆக்ராவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போலே பாபாவின் 2 நிகழ்ச்சிகள் ரத்து

கங்கனா ரனாவத் கன்னத்தில் அறைந்த பெண் காவலர் பெங்களூருக்கு மாற்றம்

பாஜ மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!