ஒத்தக்கடையில் புறக்காவல் நிலையம் அமைக்கக் கோரி வழக்கு: அரசுத் தரப்பில் அறிக்கையளிக்க உத்தரவு

மதுரை, மே 9: ராமநாதபுரம் மாவட்டம் மோர்பண்ணையைச் சேர்ந்த வக்கீல் தீரன் திருமுருகன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை யானைமலை ஒத்தக்கடை பகுதியில் கடந்த ஏப்.22 ம் தேதி 7 பேர் மதுபோதையில் பிரச்னை செய்துள்ளனர். அப்போது அவ்வழியாக வந்தவரை தாக்கினர். இதில் அவர் படுகாயமடைந்தார். எனவே, ஒத்தக்கடை, ஐயப்பன் நகர் மற்றும் நீலமேக நகர் பகுதியில் போலீஸ் புறக்காவல் நிலையம் அமைக்கவும், போதை பொருட்கள் மற்றும் மது அருந்தி வாகனம் ஓட்டு ஒரு மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட வேண்டும். தவறான செயல்களில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் பி.வேல்முருகன், பி.தனபால் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், மது போதையில் தான் அந்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் கஞ்சா விற்பனை தொடர்பாக வெளிமாநிலத்தைச் சேர்ந்த 2,486 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவாகியுள்ளன?, எத்தனை வழக்குகளில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப் பட்டுள்ளது?, மனுதாரர் குறிப்பிடும் வழக்கில் இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அரசுத் தரப்பில் அறிக்கையளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்